என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஷான் மார்ஷ்
நீங்கள் தேடியது "ஷான் மார்ஷ்"
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு 299 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது. #AUSvIND #shaunmarsh
அடிலெய்டு:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. புவனேஷ்வர் குமார் வேகத்தில் பின்ச் 6 அவுட்டானார். அலெக்ஸ் கேரி (18) ரன்கள் எடுத்தார். கவாஜா( 21) ரன்னில் வெளியேறினார். ஜடேஜா சுழலில் பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் (20) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஷான் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷமி பந்து வீச்சில் ஸ்டாய்னிஸ்( 29 )அவுட்டானார். அபாரமாக செயல்பட்ட மார்ஷ் ஒருநாள் தொடரில் 7-வது சதம் எட்டினார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளிக்க ஸ்கோர் உயர்ந்தது. 6-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தபோது புவனேஷ்வர் குமார் பந்தில் மேக்ஸ்வெல் 48 சிக்கினார். ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். ரிச்சர்ட்சன் (2) சிடில் (0) சொதப்ப ஆஸ்திரேலி அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. லியான் (12) , பெஹ்ரன்டர்ப் (1) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். #AUSvIND #shaunmarsh
இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆரோன் பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள், ஹேண்ட்ஸ் காம்ப் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். #AUSvSL
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய வீரர்கள் ஐந்து சதங்கள் அடித்த போதிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
குறிப்பாக ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் ஆகியோரால் எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. அதேபோல் ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக களம் இறங்கி சாதிக்க முடியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சொற்ப ரன்களே சேர்த்தார்.
இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த நான்கு பேரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். புகோவ்ஸ்கி, ஜோ பர்ன்ஸ், ரென்ஷா ஆகியோர் அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 2. ஹசில்வுட், 3. ஜோ பர்ன்ஸ், 4. கம்மின்ஸ், 5. மார்கஸ் ஹாரிஸ், 6. டிராவிஸ் ஹெட், 7. உஸ்மான் கவாஜா, 8. மார்னஸ் லாபஸ்சேக்னே, 9. நாதன் லயன், 10. வில் புகோவ்ஸ்கி, 11. ரென்ஷா, 12. மிட்செல் ஸ்டார்க், 13. பீட்டர் சிடில்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 1-ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷான் மார்ஷை ‘ஸ்லோ யார்க்கர்’ பந்தால் வீழ்த்த ரோகித் சர்மாதான் ஐடியா கொடுத்தார் என பும்ரா தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. மார்கஸ் ஹாரிஸ் 22 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 8 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் ஆஸ்திரேலியா மேலும் விக்கெட் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்திலும் விக்கெட் ஏதம் விழவில்லை.
கடைசி பந்தை ஷான் மார்ஷ் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் பும்ரா அந்த பந்தை ஸ்லோ யார்க்கராக வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஷான் மார்ஷ் பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேடில் பட்டதால் சந்தேகமின்றி எல்பிடபிள்யூ ஆனார்.
அதன்பின் பும்ரா அபாரமாக பந்து வீசி 15.5 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இன்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிந்தபின், பும்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தது குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை வீசும்போது ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. பந்தும் சாப்ட்-ஆக இருந்தது.
மிட்-ஆஃப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா என்னிடம், ‘‘இது கடைசி பந்து. நீங்கள் ‘ஸ்லோ’வாக வீச முயற்சி செய்யுங்கள்’’ என்றார். ஒருநாள் போட்டியில் நான் அதிக அளவில் பயன்படுத்தும் யுக்தியை அவர் கூறியதால், நான் அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். திட்டத்தை சரியாக வெளிப்படுத்தியதால், கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினோம்.
உண்மையிலேயே ரோகித் சர்மா ஆலோசனை வழங்கியதற்காக நன்றி சொல்லனும். ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, இந்த ஆடுகளத்தில் ஸ்லோ பந்துகளை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.

×

X